1.
எந்தன் ஆத்ம நேசரே, வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மார்பில் காருமேன்,
அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.
2.
வல்ல தேவார் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்,
கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்,
நீரே என்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவர்,
ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவர். – எந்தன்
3.
குறையாவும் நீக்கிட, நாதா, நீர் சம்புரணர்,
திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்,
நான் அசுத்த பாவிதான், நீரோ துயர் துயரே,
நான் அநதி கேடுள்ளான், நீர் நிறைந்த நித்தியரே,- எந்தன்
4.
பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவர்,
ஜீவ ஊற்றாம் இயேசுவே, என்தன் தாகம் தருமேன்,
ஸ்வாம, என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்.- எந்தன்
1.
enthdhan aathma nesare, vellam pondra thunpaththil
thasan thikkillamale dhadumarippokaiyil,
dhanjcham dhanththu, iyesuve, thivviya marbil karumen,
abbal karaiyetrriye modcha veeddil serumen.
2.
valla thevar allal vere dhanjcham ariyen,
kaividamal nesaththal aarrith therrith thangkumen,
neere endhan nambikkai, neer sagayam seykuvar,
eethumarra eezhaiyai seddaiyal muduvar. – enthdhan
3.
kuraiyavum neekkita, natha, neer samburanar,
thikkarroraith thangkita neere ma dhayaparar,
nan asuthdha bavithan, neero thuyar thuyare,
nan anathi kedullan, neer nirainthdha niththiyare,- enthdhan
4.
pavam yavum mannikka aararul amainthdha neer
ennais suththikarikka arul payas seykuvar,
jeeva uutrram iyesuve, endhan thakam dheerumen,
savama, endrum ennile neer suranththu uutrumen.- enthdhan